மழை காரணமாக 4 விரைவு ரயில்கள் ரத்து

3

சென்னை: சென்னை பேசின் பாலம் - வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

*திருப்பதியில் இருந்து இன்று மாலை 6:05 க்கு சென்னை வர வேண்டிய சப்தகிரி விரைவு ரயில்

*சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11 மணிக்கு ஈரோடு கிளம்பும் ஏற்காடு விரைவு ரயில்

*சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9:15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு விரைவு ரயில்

*சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4:35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி விரைவு ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து



சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவுரை



இதனிடையே தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,

* தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறைவான வேகத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும்; இதனால் ரயில்கள் தாமதம் ஆகலாம்

* ⁠வானிலை நிலவரத்தை பொறுத்து, ரயில்கள் பகுதி நேரமாக அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படலாம்

* ⁠பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளது.


ரயில் புறப்படும் இடம் மாற்றம்



பேசின் பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால், சில ரயில்கள் கிளம்பும் இடம்மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

*சேலம் வழியாக பாலக்காடு வரை இயக்கப்படும் ரயில் ஆவடியில் இருந்து கிளம்பும்

*திருவனந்தபுரம், மேட்டுப்பாளையம் கோவை செல்லும் ரயில்கள் ஆவடியில் இருந்து கிளம்பும்

*சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வரை செல்லும்ரயில் பெரம்பூரில்இருந்து கிளம்பும்

*ஜோலார்ப்பேட்டை ஆழப்புலா விரைவு ரயில் சென்னை கடற்கரை வழியாக இயக்கப்படும்.

Advertisement