மழை நீர் அகற்றும் பணியில் 133 மோட்டார்கள்: குடிநீர் வாரியம் தகவல்

2

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் குடிநீர் வாரியத்தின் மூலம் , சென்னையில் 15 மண்டலங்களில் 119 இடங்களில் 133 மோட்டார்கள் மூலம் நீர் அகற்றும் பணி நடக்கிறது. 300 நிவாரண மையங்கள், 90 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.


குடிநீர் தரத்தை பரிசோதனை செய்ய 900 மாதிரிகள் பரிசோதனை சேகரிக்கப்பட்டு உள்ளது. அவை பரிசோதித்து மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். பருவமழை காலத்தில் மக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குடிநீர் தொடர்பான சந்தேகங்களுக்கு, 044-45674567 மற்றும் 1916 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.


அடைப்புகளை சரி செய்ய 597 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.மழைநீர் தேங்கினால் அவற்றை உடனே அப்புறப்படுத்த 2,149 களப்பணியாளர்கள் பணியில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement