பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை
சேலம்: சேலம், தாதகாப்பட்டி, ஸ்ரீரங்கன் தெருவை சேர்ந்தவர் மணிநாதன். இவரது மனைவி நர்மதாஸ்ரீ, 25. இவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸில், கணக்காளராக பணி புரிந்தார். நேற்று முன்தினம் காலை அவர் பணிக்கு சென்றார். அப்போது, 'பணிக்கு செல்ல வேண்டாம்' என, கணவர் எதிர்ப்பு தெரிவித்து தடுத்துள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்து நர்மதாஸ்ரீ, வீட்டில் இருந்த சில மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயக்கம் அடைந்தார். அவரை, கணவர் உள்ளிட்ட உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. நர்மதாஸ்ரீயின் தந்தை ராமச்சந்திரன் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் திருமணம் ஆகி, 5 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., அபிநயாவும் விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement