பொது நிதி ஒதுக்கக் கோரி 7 கவுன்சிலர்கள் பி.டி.ஓ.,விடம் மனு

பரங்கிப்பேட்டை,: வளர்ச்சி பணிகளுக்கு பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கக் கோரி பரங்கிப்பேட்டை ஒன்றிய பி.டி.ஓ.,விடம் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., கவுன்சிலர்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.


பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் கடந்த 7 மாதங்களாக நடக்கவில்லை. வளர்ச்சி பணி செய்ய பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.மு., கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


கடந்த மூன்று ஆண்டாக பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கவில்லை என, அனைத்து கவுன்சிலர்களும் புலம்பி வருகின்றனர்.


இந்நிலையில் வளர்ச்சி பணிகள் செய்ய பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ரெங்கம்மாள், ரவி, இளவரசி, பாஸ்கர், ஆனந்தஜோதி சுதாகர், பா.ம.க., கவுன்சிலர் முருகேசன், தே.மு.தி.க., சந்திரகுமார் உள்ளிட்டோர் பி.டி.ஓ., பிரேமாவிடம் மனு கொடுத்தனர். இதனால், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement