கம்பம் பள்ளத்தாக்கில் நிரம்பும் குளங்கள், கண்மாய்கள்
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் மழை தொடர்வதால் கண்மாய், குளங்கள் நிரம்பி வருகின்றன.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவ மழையும், புயல் மழையும் சேர்ந்து பெய்து வருகிறது.
காலையில் வெறிச்சோடியும், பிற்பகல் மற்றும் இரவில் கனமழையும் பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வருவதால் கம்பம் வீரப்ப நாயக்கன் குளம், ஒட்டு உடப்படி குளங்கள், உத்தமபாளையம் தாமரைகுளம், குப்பி செட்டி குளம், சின்னமனூர் செங்குளம், உடப்படி குளம், கருங்கட்டான்குளம் நிரம்பி வருகிறது. கண்மாய்கள் நிரம்பி வருவதால் நீர்ப்பாசன துறையினர் கரைகளை கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்றுகள் வளர்க்கும் நர்சரிகளை தயார் செய்து வருகிறனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement