அடிப்படை வசதி கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மா.கம்யூ., கட்சி சார்பில் நேற்று, கிளை செயலாளர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட, 17-வது வார்டு பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வடிகால் கால்வாய் முற்றிலும் அகற்றிவிட்டு புதிய வடிகால் கால்வாய் கட்டித்தர வேண்டும்.
'ஜல்ஜீவன்' திட்ட குழாய்களை, வடிகால் கால்வாய் குறுக்கே அமைத்துள்ளனர். இதனால், வடிகால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மீண்டும் வீட்டிற்குள்ளே திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, வடிகால் கால்வாய் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement