நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி

7

புதுடில்லி: அமெரிக்கா அதிபர் தேர்தலில் வென்ற, எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.



பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள். இருவரும் இணைந்து மற்றும் மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதியை மேம்படுத்த பாடுபடுவோம்.


உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தியா, அமெரிக்கா இடையே உறவை வலுப்படுத்தப்படுத்த முயற்சிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலக தலைவர்கள் வாழ்த்து!




அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு




டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிக சிறந்த கம்பேக். இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான நட்புக்கு சக்திவாய்ந்த உறுதி கிடைத்திருக்கிறது.


பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்



டொனால்டு டிரம்புக்கு வாழ்த்துகள். உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.




உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி




டிரம்ப் தலைமையில் வலுவான அமெரிக்கா சகாப்தத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம். வலிமையின் மூலம் அமைதியான அணுகுமுறையை கையாளும் டிரம்பின் உறுதிபாடு பாராட்டத்தக்கது. கூட்டாண்மையைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர்



வரலாற்று வெற்றியை பெற்றுள்ள டிரம்பிற்கு வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.

Advertisement