வள்ளிமலையில் கந்த சஷ்டி உற்சவம்
வள்ளிமலை:வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளியை முருகபெருமான் கவர்ந்த தல வரலாறு கொண்ட தலம் இது. இங்கு மலை மீது வள்ளி, தெய்வானை உடனுறை குகை கோவிலும், அடிவாரத்தில் உற்சவர் கோவிலும் அமைந்துள்ளன. வள்ளியை முருகப்பெருமான் கவர்ந்த தலம் என்பதால், இங்கு திருத்தணிக்கு இணையாக ஏராளமான திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கந்த சஷ்டியை ஒட்டி கடந்த ஆறு நாட்களாக மலைக்கோவில் மற்றும் உற்சவர் கோவிலில் சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டு வந்தது. நிறைவு நாளான நேற்று முருகப்பெருமான் சந்தனகாப்பு மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டியை ஒட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement