குன்றக்குடி கோயிலில் சூரசம்ஹாரம்
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் சஷ்டி விழா கடந்த நவ. 2ம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சுவாமி அலங்காரத்தில் அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.
மதியம் மலையிலிருந்து வேல் இறங்குதல் மாலை சண்முகநாதப் பெருமான் எழுந்தருளல், அன்னை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வேலுடன் சண்முகநாதப் பெருமான் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார். மாலை 6:30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
நிகழ்ச்சியை தொடந்து வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிறகு சுவாமி மலைக்கு திரும்பும் நிகழ்வு நடந்தது.
ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.
இன்று காலை 11:00 மணிக்கு திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு தங்கரதத்தில்சுவாமி எழுந்தருளலும் நடைபெறுகிறது.