சிவகங்கையில் 39 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை: சிவகங்கையில் கடந்த 11 மாதத்தில் 39 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உட்பட 5 சப் டிவிஷன்கள் உள்ளன.

இதில் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை சப் டிவிஷன் உள்ளன.

இந்த ஆண்டு இதுவரை 39 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக 27 பேர், பாலியல் வழக்கு தொடர்பாக 3 பேர், கஞ்சா வழக்கு தொடர்பாக 1, மது விற்பனை தொடர்பாக 5, திருட்டு தொடர்பாக 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.

Advertisement