நாளை பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நாளை (நவ., 9) பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019ன் படி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மக்கள் குறைதீர் முகாம் நாளை காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள, வட்ட வழங்கல் பிரிவில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.