ரூ.7 கோடியில் சாலை பணிகள்

பேரையூர்: பேரையூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை ரூ.7 கோடி மதிப்பீட்டில் பராமரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: பேரையூர் - பெரியபூலாம்பட்டி, எம். சுப்புலாபுரம்- செங்குளம் சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்திடவும,. புதுப்பட்டி-மங்கல்ரேவு, மங்கல்ரேவு- எழுமலை, டி கல்லுப்பட்டி-விருதுநகர் சாலைகளில் சேதம் அடைந்த ஓடுதளத்தை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற உள்ளன.

இதற்காக ரூ 7.10 கோடி மதிப்பீட்டில் இப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றனர்.

Advertisement