மாவட்ட கலைத்திருவிழா; அரவக்குறிச்சி பள்ளி தகுதி
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழாவில் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மாணவர்களின் தனித்திறனை வளர்க்க, தமிழக அரசு கலைத்திருவிழா போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், அரவக்குறிச்சி வட்டார வளமையத்தில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தன. அதில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் மற்றும் பல குரல் பேசுதல் போட்டிகளில் சஞ்சீவிகுமார் முதலிடம், களிமண் சுதை வேலைப்பாட்டில் மித்ரன் முதலிடம் பெற்றனர். வில்லுப்பாட்டில் சஞ்சீவிகுமார், முகமது ஷகில், எட்வின் நிஷாந்த் ராஜ், ஜாபர் சாதிக், நவ்யன் குழு மூன்றாம் இடம் பெற்றனர். குழு நடனம் பரதநாட்டியத்தில் லீனா, அபிரக் ஷனா, யாழினி, திவ்யஸ்ரீ, நித்யஸ்ரீ மூன்றாம் இடம் பெற்றனர்.
முதலிடம் பிடித்த மாணவர்கள், கரூரில் நடைபெறும் மாவட்ட போட்டியில் பங்கு பெறுவர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த பள்ளியின் கலைக்குழு தலைவர் சகாயவில்சன், பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு, ஆசிரியர்கள் சங்கர், ரூபா ஆகியோரை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் மற்றும் தலைமையாசிரியர் சாகுல் அமீது, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.