நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் அமைக்க வேண்டும்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதியில், பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில், நடைபாதை அமைத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை வழியாக தினமும் ஏராளமானோர் நடந்து செல்கின்றனர். நடைபாதை சிமென்ட் தளத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இது பல இடங்களில் மேடு, பள்ளமாக உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், நடைபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நடந்து செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
நடைபாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நடைபாதை சேதமடைகிறது. சிலர் பாலத்தில் வாகனங்கள் செல்லும் பகுதியில் நடந்து செல்கின்றனர். எனவே, நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் அமைக்க, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement