காங்காதீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
சின்னசேலம்: சின்னசேலம் காமாட்சியம்மன் சமேத கங்காதீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.
சின்னசேலத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கங்காதீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 அடி உயர, 12 அடி அகல கலை நுணுக்கங்களுடன் கூடிய புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
அதனையொட்டி காலை 8:00 மணிக்கு பூஜைகளுக்குப்பின் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கினர்.
இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமேஷ், கோவில் ஆய்வாளர் திருமூர்த்தி, அலுவலர் சின்னசாமி, கோவில் அறங்காவலர் குழுவினர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement