திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.

அதனையொட்டி, கடந்த 6ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை நடந்தன.

காலை 8:45 மணியளவில் கோவில் கலசத்திற்கும், 9:00 மணியளவில் மூலவர் திரவுபதி அம்மன் சுவாமிக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

சுற்று வட்டார பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, வாணாபுரம் அடுத்த மேலந்தல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. கடந்த 6ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 5:00 மணியளவில் இரண்டாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை செய்து, கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement