குட்கா பொருட்கள் கடத்தல் ஒருவர் மீது 'குண்டாஸ்'
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் புகையிலை பொருட்களைக் கடத்திய நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஸ்ரீதர், 38; இவர் ஆம்னி வேனில் கடந்த மாதம் 14ம் தேதி பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்த போது, கச்சிராயபாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ரஜத் சதுர்வேதி பரிந்துரையின் பேரில் ஸ்ரீதரை, கலெக்டர் பிரசாந்த், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடலுார் மத்திய சிறையில் உள்ள ஸ்ரீதரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement