'ஒன்வே' மாற்றம் எதிர்த்து மறியல்; 30 பேர் மீது வழக்கு

திருப்பூர் : திருப்பூர் குமார் நகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை குறைக்கும் வகையில், தற்காலிக சோதனை முறையிலான போக்குவரத்து மாற்றத்தை மாநகர போலீசார் மேற்கொண்டனர். அதில், அங்கேரிபாளையம் ரோட்டை ஒருவழி பாதையாக போலீசார் மாற்றினர்.

அந்த ரோட்டில், இரு பள்ளிகள் உள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் கமிஷனர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர். காலை மற்றும் மாலை என, இரண்டு மணி நேரம் மட்டும் பெற்றோர் வசதிக்காக இருவழிபாதையாக மாற்றம் செய்து கொடுத்தனர்.

இச்சூழலில், தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜன் புகாரின் பேரில், போக்குவரத்துக்கு இடையூறாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் உட்பட, 30 பேர் மீது திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement