நரம்பு வீக்கத்துக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அவசியம்

'கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் நடக்கும், நரம்பு வீக்கம் (வெரிகோஸ் வெய்ன்) சிறப்பு முகாமில், டாப்ளர் ஸ்கேன், 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது,' என, கே.எம்.சி.எச்., நரம்பு வீக்க சிறப்பு சிகிச்சை மற்றும் கதிரியக்க துறை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

நம் உடலில் தோல்களுக்கு கீழ் செல்லும் ரத்த நாளங்கள் வீக்கமடைந்து, தடிமனாக காணப்படுவதை வெரிகோஸ் வெய்ன் என்கிறோம். இப்பாதிப்பு, அதிக நேரம் நின்று கொண்டே பணியாற்றுவோர், அதிக எடை உள்ளவர்களுக்கும், மகப்பேறு பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரத்தக்குழாய் புடைத்து இருத்தல், தோல் நிறம் மாறுதல், காலில் வலி, வீக்கம் மற்றும் அரிப்பு உள்ளிட்டவை நரம்பு வீக்கத்தால் ஏற்படும். இதற்கு ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை எடுப்பது அவசியம். அலட்சியம் காட்டினால், காலில் இருந்து ரத்தக் கசிவு, ஆறாத புண்கள் ஏற்படலாம்.

இதை குணப்படுத்த கே.எம்.சி.எச்.,ல் நவீன சிகிச்சை முறையான நுண்துளை அறுவை சிகிச்சை (பின் ஹோல் சர்ஜரி) முறை மேற்கொள்ளப்படுகிறது.

இச்சிகிச்சை முறையில், சிறிய துளை மூலம் பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய்க்குள் (ரேடியோ பிரிக்வன்சி அபலேசன் டிவைஸ்) கருவியை செலுத்தி, வெப்பம் மூலம் பாதிப்புகள் சீர் செய்யப்படுகிறது.

இக்கருவியை செலுத்த முடியாத பாதிக்கப்பட்ட பகுதியில் ஊசி வாயிலாக மருந்து செலுத்தியும் (போம் சிகிலிரோதெரபி) சிகிச்சை அளிக்கிறோம்.

இச்சிகிச்சைக்கு பின் கால்களில் தழும்புகள் இருக்காது. ஒரே நாளில் நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பி விடலாம். மயக்க மருந்து தேவைப்படாததால், வேறு ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

கே.எம்.சி.எச்.,ல் வெரிகோஸ் வெய்ன் சிறப்பு முகாம், நவ., 30ம் தேதி வரை, தினமும், காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. இதில், மருத்துவர் ஆலோசனை, டாப்ளர் ஸ்கேன் 50 சதவீத சிறப்பு சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 87548 87568 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இ-மெயில்: drvenkatesh@kmchhospitals.com

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement