யாவரும் சமம்; நீதியின் தாரக மந்திரம்

தேசிய சட்ட சேவைகள் தினம், ஆண்டுதோறும் நவ., 9ம் தேதி பின்பற்றப்படுகிறது.

முகமது ஜியாவுதீன், முன்னாள் மாவட்ட நீதிபதி, முழு நேர உறுப்பினர் - மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம்:

அனைத்து மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளைப் பெறுவதற்கான சரியான வழியைத் தேடுவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. உயிர் வாழ உணவு, நீர்; வசிப்பிடம், கல்வி, ஆடை, மருத்துவ வசதி போன்ற அடிப்படை தேவைகள் எதுவும் கிடைக்காத மக்கள் இன்றும் பலர் உள்ளனர்.

சட்டப் பணிகள் ஆணையம் ஏழைகளுக்கு அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் பெற உதவுகிறது. நலிவடைந்த மக்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்க வைக்கிறது.அனைத்து உரிமைகளும் எந்த பாகுபாடும் இன்றி ஏழைகள், பாதிக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என அனைவருக்கும் கிடைக்க வகை செய்கிறது. இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியை உறுதி செய்கிறது. இந்த நாளில், பாதிக்கப்பட்ட பெண்கள், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்காகவும், 'யாவருக்கும் நீதி பெற சம வாய்ப்பு', 'வானம் வீழினும் நீதி நிலவுக' என்ற தாரக மந்திரத்தோடு இதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

தேசிய சட்ட சேவைகள் தினம், ஆண்டுதோறும் நவ., 9ம் தேதி பின்பற்றப்படுகிறது. 'யாவருக்கும் நீதி பெற சம வாய்ப்பு', 'வானம் வீழினும் நீதி நிலவுக' என்ற தாரக மந்திரத்தோடு இத்தினத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.(செய்தி உள்ளே)

சட்ட விழிப்புணர்வு

ஏற்படுத்த வேண்டும்

ஷாபீனா, செயலாளர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு:

இந்த தினம், அனைத்து குடிமக்களுக்கும், அவர்களது பின்னணி அல்லது அடையாளம் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல், இலவச சட்ட உதவி கிடைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தோர், பெண்கள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த தனி நபர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதி மன்றம் சட்டப் பணிகள் அதிகாரச் சட்டத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சட்டம் இயற்றப்பட்டதன் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், மக்களுக்கு கிடைக்கக்கூடிய சட்ட சேவைகள் குறித்த தகவல்களை ெகாண்டு சேர்க்க ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சட்டத்தின் ஷரத்துகள்

மக்களைச் சேர வேண்டும்

* ஹரிதாஸ், நோட்டரி வக்கீல்:

சட்ட சேவை அதிகார சட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் மற்றும் வழக்கு தொடுப்பாளர்களின் உரிமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தை நாள் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் தான் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிகள், சட்ட உதவி முகாம்கள் மூலம் மக்களுக்கு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சட்டத்தின் அனைத்து ஷரத்துகளும் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வோம்.

'சட்டத்துறையினர்

உறுதியேற்போம்'

கனகசபாபதி, குற்றத்துறை அரசு வக்கீல், திருப்பூர்.

தேசிய, மாநில, மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சட்டப் பணிகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதன் மூலம் சட்ட உதவிகள் மட்டுமின்றி அடிப்படை உரிமைகள் குறித்த உதவிகளும் பெறலாம். பல்வேறு தரப்பினருக்கான சட்ட உதவி முகாம்கள், சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், லோக்அதாலத், சமரச தீர்வு போன்ற நடவடிக்கைகள் இதன் அடிப்படையில் அமைந்துள்ளது.எந்த நிலையிலும் யாருக்கும் சட்ட ரீதியான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக சட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்துறையினர் பணியாற்றுவோம் என உறுதி ஏற்போம்.

- நாளை(நவ., 9) தேசிய சட்ட சேவைகள் தினம்.



சட்டமும், நீதியும்

அனைவருக்கும் சமம்சுப்புராஜூ, தலைவர், மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம், திருப்பூர்:இந்த நாட்டின் சட்டம் அனைத்து குடிமகன்களுக்கும் பாதுகாப்பையும், அடிப்படை உரிமைகளையும் வழங்குகிறது. சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுதான். அதே போல் சட்டமும், நீதியும் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது அதன் தத்துவம்.நலிவடைந்த தரப்பினரும் உரிய சட்ட பாதுகாப்பு, சட்ட உதவிகள் பெற வேண்டும் என்பது தான், சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நோக்கம். இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்ட உதவி முகாம்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகிறது. சட்ட சேவை தினம் கொண்டாடப்படும் நாளில் அனைத்து மக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்வோம் என இந்நாளில் உறுதியேற்போம்.

Advertisement