ஆதி காடு தோட்டம் மரங்களின் கூட்டம்

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நேற்று 350 மரக்கன்றுகள் நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுவருகிறது. இதுவரை ஒன்பது திட்டங்கள் முடிவடைந்த நிலையில், மூன்று லட்சம் மரக்கன்று நடுவதற்கான இலக்குடன் 'வனத்துக்குள் திருப்பூர் திட்டம் - 10' பயணம் வெற்றிநடை போடுகிறது.

நேற்று, கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான, காங்கயம் அடுத்த சிவன்மலை, கரட்டுப்பாளையம் ஆதிகாட்டுத் தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. புளி 145 மகோகனி, 140; சந்தனம் 10; நாவல், 10; ஈட்டி , 2; தேக்கு 38; கொடுக்காப்புளி 5 என, மொத்தம் 350 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement