நீதிபதிகள் இடமாற்றம்

திருப்பூர் ; தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம், உடுமலை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், ஈரோடு தலைமை குற்றவியல் நீதிபதியாக இருந்த சரவணன், தாராபுரம் 3வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர்.

திருப்பூர் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு கோர்ட் நீதிபதி பத்மா திருப்பூர் 1வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், திருப்பூர் 1வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ஸ்ரீதர், திருப்பூர் 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், தாராபுரம் 3வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ஜான்மினோ, கோவை 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், தர்மபுரி மகளிர் கோர்ட் சிறப்பு நீதிபதியாக இருந்த சுரேஷ், திருப்பூர் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு கோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement