எச்.எம்.எஸ்., தொழிலாளர் கூட்டம்

மதுரை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்க மாதாந்திர கூட்டம் மதுரையில் தலைவர் ரவி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்கள் கண்ணன், ஒச்சாத்தேவன், ஆலோசகர் சவுந்தரராஜ் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் அங்குசாமி வரவேற்றார்.

பொதுச் செயலாளர் ஷாஜகான் தீர்மானங்களை விளக்கிக் கூறியதாவது: மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், ஆசிரியர்கள் 53 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெறுகின்றனர். ஆனால் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 12 மாத அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் 110 மாத அகவிலைப்படி உயர்வும் நிலுவையில் உள்ளது.

தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை வழங்குவதில் பாரபட்சம் பார்க்காமல், காலம் கடத்தாமல் நிதி ஆதாரத்தை உருவாக்கி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றார். கிளைத் தலைவர் வர்க்கீஸ் ஜார்ஜ் நன்றி கூறினார்.

Advertisement