நாமக்கல் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

நாமக்கல்: நாமக்கல், காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று கந்தசஷ்டியையொட்டி காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கி, சக்தி மற்றும் சுப்ரமணியர் ேஹாமம் நடந்தது.

பின், பாலதண்டாயுதபாணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபி ேஷகம் நடந்தது. 11:30 மணிக்கு தங்கக்கவசத்துடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், 7:00 மணிக்கு முருகப்பெருமான் சூரசம்ஹாரம், மின் விளக்கு ரதத்தில் திருவீதி உலாவும் நடந்தது.

* நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிேஷகம் நடந்து, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

* நாமக்கல், கருங்கல்பாளையம், கரையான்புதுார் கருமலை, தண்டாயுதபாணி கோவிலில் நடந்த கந்தசஷ்டி விழாவில் மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

* நாமக்கல், ரெட்டிப்பட்டி, கந்த கிரி பழனியாண்டிவர் கோவிலில், ஜம்புகேஸ்வரர் பிரதோஷ வழிபாட்டு சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், 36 முறை கந்தர் சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 5:00 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

* மோகனுார், காந்தமலை பாலசுப்ரமணியர் கோவிலில் சுவாமிக்கு, பல்வேறு அபி ேஷகம், அங்காரம் நடைபெற்று, தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் உள்ள சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ராஜா சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

* ப.வேலுார் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள, பாலமுருகன், கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில், 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்உள்ள சுப்ரமணியர், பொத்தனுார் அருகே உள்ள பச்சமலைமுருகன் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

* வெண்ணந்துாரில், குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். வேலுடன் காட்சி தந்த உற்சவர் முருகப்பெருமானுக்கு, கிரீடம் அணிவித்து வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.

* குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகன் வலம் வந்தார்.

அரோககரா சரண கோஷத்துடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வந்தனர். இதே போல் வட்டமலை வேலாயுதசுவாமி கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
* சேந்தமங்கலத்தில், தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. 24வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது.

இதேபோல், கூலிப்பட்டியில் உள்ள பழனியாண்டவர் கோவிலில், ‍நேற்று மாலை சூரசம்ஹார விழாவையொட்டி, உற்சவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கந்தகிரி மலை அடிவாரத்தில், பழனியாண்டவர் மயில் வாகனத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement