காளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்

குளித்தலை: குளித்தலை, மலையப்ப நகரில் உள்ள தேவேந்திரகுல தெருவில், புதியதாக கட்டப்பட்ட காளியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக கோவில் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்ததும், கும்பாபிஷேகம் செய்ய கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த அக்., 29ல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை, 10:00 மணியளவில் பெரிய பாலம் பரிசல் துறை காவிரி ஆற்றில், பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து, மேள தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், காளியம்மன் கோவிலில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை ஊற்றி, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மலையப்ப நகர் மற்றும் புது காலனி கிராம மக்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

Advertisement