குண்டாஸில் வாலிபர் கைது
கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சவுந்தராபுரம் அருகில் டாஸ்மாக் பார் செயல்படுகிறது. இங்கு அக்.,11ல் குரும்பபட்டியை சேர்ந்த சேகர், 48, பள்ளப்பட்டி ஹபீப் நகரை சேர்ந்த லெனின், 31, உள்பட நண்பர்கள் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், லெனின் பீர் பாட்டிலால், சேகரை குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார்.
இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து, லெனினை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கரூர் எஸ்.பி.,பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், கரூர் கலெக்டர் தங்கவேல் உத்தரவின் படி, லெனினை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement