தோகைமலையில் மீட்கப்பட்ட குழந்தை; தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

கரூர்: கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: தோகைமலை ஒன்றியம், காவல்காரன்பட்டியில் கடந்த ஜூன், 11ல், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை, கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து பெரம்பலுார் நல்ல ஆலோசனை மாதா அன்பு இல்லம் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

குழந்தையை பற்றிய விபரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், கரூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமைகோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லாசான்று
வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 04324296056, 8903331098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement