ஆபாச பேச்சு வாலிபர் கைது

புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதாரப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் பாரதிபுலியூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் முருகன் 30, என்பவர் சேதாரப்பட்டு தொழிற்சாலை பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வேலைக்கு சென்று வரும் பெண்களைஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Advertisement