நெல் நடவுப் பணி விவசாயிகள் மும்முரம்
திருப்பூர்; ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்காக கடந்த ஆக., 15ம் தேதி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட இத்திட்டத்தின் கடை மடைப் பகுதிக்கு நீர் வந்துள்ளது.
இந்த நீரினை பயன்படுத்தி காங்கயம் பகுதியில், திட்டுப்பாறை, மருதுறை, நத்தக்காடையூர், முத்துார் மற்றும் மங்களப்பட்டி உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல் நடவுப் பணியை மேற்கொண்டு உள்ளனர்.
விவசாய கூலித்தொழிலாளர்கள் பெரும்பாலும், நுாறு நாள் வேலை திட்டத்துக்கு சென்று விடுகின்றனர்.
இதனால், வெளியூர் ஆட்களை அழைத்து வந்து நடவுப் பணி செய்கின்றனர். ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பிரச்னை, நெல்லுக்கு போதிய விலையின்மை போன்ற காரணங்களால், நெல் சாகுபடி பரப்பு குறைகிறது. இதனை தடுக்க, நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.