மாவட்ட கைப்பந்து அணிக்கு பாராட்டு

திருப்பூர்; வேலுாரில், மூன்று நாட்கள் மாநில அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி நடந்தது. இதில், பங்கேற்ற திருப்பூர் அணி, நான்காமிடம் பெற்றது.

வேலுாரில் மாநில வாலிபால் போட்டியில் பங்கேற்க திருப்பூர் அணி, நாக் - அவுட் சுற்று முடிவில், அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. சென்னை அணியிடம் போராடி தோற்றதால், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டியில் பங்கேற்றது. புதுக்கோட்டை அணியினருடன், 2 - 1 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி, நான்காமிடம் பெற்றது. இருப்பினும், மாநில போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பின் நான்காமிடம் பெற்ற திருப்பூர் மாவட்ட ஆண்கள் வாலிபால் அணியை, மாநில கைப்பந்து கழக துணை சேர்மன் ரங்கசாமி மற்றும் திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழக நிர்வாகிகள் சுலோச்சனா கண்ணன், கார்த்திகேயன், ஜீவானந்தம், சண்முகசுந்தரம் உட்பட நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement