தேசிய நீச்சல் போட்டிக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு

திருப்பூர்; திருப்பூர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி, தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில், தேசிய நீச்சல் போட்டி, 24 முதல், 30ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட தமிழக அணியில், திருப்பூர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி அர்ச்சனா, 19 வயது பிரிவில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஏழாம் வகுப்பு முதல் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று வரும் அர்ச்சனா, மாநில போட்டிகளிலும் அசத்தி வந்தார். இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், திருவண்ணாமலையில் மாநில நீச்சல் போட்டி நடந்தது. இதில் பங்கேற்று, 100 மீ., 200 மீ., பிரிவில் தங்கம், 50 மீ., பேக்ஸ்டோக் பிரிவில் வெள்ளி வென்றார்.

ஏற்கனவே தென்மாநில அளவில் அதிக வெற்றி பெற்ற அர்ச்சனா, மாநில போட்டியில் இரு பிரிவில் தங்கம் வென்றதால், குஜராத்தில் நடக்கும் தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தேர்வாகியுள்ளார். இவரை திருப்பூர் மாவட்ட நீச்சல் சங்க நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement