மாநில கபடி: மாவட்ட அணிக்கு வழியனுப்பு விழா
திருப்பூர்; மாநில கபடி கழகம் சார்பில், நேற்று துவங்கி வரும், 10ம் தேதி வரை, திருவண்ணாமலையில், 50வது இளையோர் பெண்கள் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.
இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட வீராங்கனையர் அணித்தேர்வு, காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக மைதானத்தில் நடந்தது.
மாவட்டம் முழுதும் இருந்து, 90 பேர் பங்கேற்றனர். இவர்களில், 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அணியின் தலைவியாக கஜிதாபீவி தேர்வு செய்யப்பட்டார். இவர்களுக்கு மாவட்ட கபடி கழகம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை செல்லும் மாநில அணிக்கு வழியனுப்பு விழா, விளையாட்டு உபகரணம் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கபடி கழக செயலாளர், மாநில பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ராமதாஸ், செய்தி தொடர்பாளர் சிவபாலன், துணை செயலாளர்கள் வாலீசன், செல்வராஜ், மூர்த்தி டிரேடர்ஸ் மனோகரன், தேர்வுக்குழு தலைவர் ருத்ரன், வளர்ச்சிக்குழு தலைவர் ஹார்லிக் ராஜூ, டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர் ரங்கசாமி, வளர்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர் காரல்மார்க்ஸ் ரவிச்சந்திரன். செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், புரவலர்கள் வேலுசாமி, மகாலட்சுமி, ரத்தினசாமி, தேவராஜ், பிரேமா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெண்கள் கபடி அணியுடன் பயிற்சியாளர் செந்தில்குமார், மேலாளர் வாசுதேவன், கபடி போட்டி அணியுடன் திருவண்ணாமலை சென்றனர்.