தவறான கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிவிடும்; எச்சரிக்கிறார் ராகுல்!

13

புதுடில்லி: 'திறமையற்ற அரசும் தவறான கொள்கையும் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிவிடும்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறுகுறு தொழில்கள் மற்றும் முறைசாரா துறைகளை அழித்ததன் மூலம் ஏகபோகங்களுக்கு வழிவகுத்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும், ஊழல் மற்றும் கருப்புப் பணத்தைத் தடுக்க பணப் பரிவர்த்தனைகளைக் குறைப்பதும் அப்போது அரசு கூறிய காரணங்களில் ஒன்று.


8 ஆண்டுகளுக்கு முன்பு, பண மதிப்பிழப்புக்கு முன் இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தை பயன்படுத்துகிறது. ரொக்க பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. திறமையற்ற மற்றும் தவறான நோக்கங்களைக் கொண்ட கொள்கைகள், நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிவிடும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement