பிளஸ் 2 தேர்வுக்கு ஆயத்தம்

திருப்பூர்; வரும், 2025, மார்ச், 3 ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய தேர்வுகள், மார்ச், 11 முதல், 25 வரை நடக்கிறது. பிப்., மாதம் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளது. தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பு கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் விபரங்களை மேல்நிலைப்பள்ளி வாரியாக சேகரிக்கும் பணியில் மாவட்ட கல்வித்துறை சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது.

முதல் கட்ட கணக்கீட்டின் படி, நம் மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 469 பேர் நடப்பாண்டு, பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். இதற்காக அவர்களின் விபரங்களை 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. கடந்தாண்டை விட சற்று குறைவான மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். இருப்பினும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர் இறுதி செய்யப்பட்ட பின், தேர்வு மையங்கள் இறுதி செய்யப்படுமென, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement