வரத்து அதிகரிப்பு தக்காளி விலை 'சரிவு'

திருப்பூர்; தீபாவளிக்கு முன் தக்காளி கிலோ, 45 - 55 ரூபாய்க்கு விற்றது. பண்டிகைக்கு பின் விற்பனை சற்று குறைந்தது.

இருப்பு வைக்கப்பட்ட தக்காளி, வெளிமாநிலங்களில் இருந்து வரத்துவங்கியது. உள்ளூரிலும் மழை குறைந்து, உற்பத்தி அதிகமானதால், தக்காளி வரத்து எகிறியது. திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு மூன்று டன், தெற்குக்கு, 14 டன் தக்காளி நேற்று வந்தது.

சந்தை வரத்தை விட கூடுதலாக வெளிமாநில தக்காளி தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வந்தது. வழக்கமாக தீபாவளி முடிந்த ஒரு வாரம் விற்பனையில் மந்தமாக இருந்தாலும், அடுத்தடுத்த விசேஷ முகூர்த்த தினங்கள் வரும் போது, விற்பனை அதிகரிக்கும். ஆனால், நடப்பு வாரம் இன்னமும் விற்பனை அதிகரிக்கவில்லை.

நேற்று தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தக்காளி கிலோ, 27 ரூபாய், உழவர் சந்தையில் தக்காளி கிலோ, 32 ரூபாய்க்கு விற்றது. ரோட்டோரங்களில் மூன்று கிலோ, 100 ரூபாய்க்கும் தக்காளி விற்கப்பட்டது.

Advertisement