பிரெஞ்சு மாணவர் கூட்டமைப்பு உதயம்
புதுச்சேரி: இந்திய பிரெஞ்சு ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சங்கம் சார்பில்,தேசிய பிரெஞ்சு மாணவர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா, காஞ்சிமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் நேற்று நடந்தது.பட்ட மேற்படிப்பு இயக்குநர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பிரெஞ்சு துறை தலைவர் வெங்கட சுப்புராய நாயகர் வரவேற்றார். புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரான்ஸ் துணை துாதர் எத்தியன்ரொலன்ட் பியேக், பிராங்கோபோன் பல்கலைக்கழக நிறுவனஆசியா பசிபிக் பிரிவு இயக்குநர் நிக்கோலஸ் மைனெட்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பிரான்ஸ் துணை துாதர் எத்தியன்ரொலன்ட் பியேக் பேசுகையில், 'பிரெஞ்சுமொழி தெரிந்து கொள்ள மாணவர்களுக்கு உலக அளவில்வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.இந்தியாவில் கலாசாரம் எனக்கு பிடித்துள்ளது. புதுச்சேரியின் கலாசாரம், உணவு முறைகள் பிடித்துள்ளது' என்றார்.
தொடர்ந்து பிரெஞ்சு மொழி பேசும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது.
இந்திய பிரெஞ்சு ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சங்க தலைவர் அருண்குமார் கூறுகையில், 'இந்த கூட்டமைப்பு மூலம் இந்திய மாணவர்களுக்கு மொழி, கலாசாரம், தொழில்முறை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். பிரெஞ்சு மொழி பேசும் மக்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும், இணைக்கவும் உதவும்' என்றார். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.