திருச்செந்தூரில் கொட்டியது கன மழை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகுதியில் இரவு முழுவதும் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் ரோட்டில் ஆறாக ஓடியது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபடாததால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்த படி பள்ளிக்கு சென்றனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 10:30 மணியளவில் மழை பெய்ய துவங்கியது. இந்த மழை இடைவிடாமல் பெய்தது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 60 மி.மீ., குலசையில் 50 மி.மீ., காயல்பட்டினத்தில் 30 மி.மீ., மழையளவு பதிவானது.


பல இடங்களில் ரோடுகளில் மழை நீர் ஆறாக ஓடியது. இந்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மாணவ, மாணவிகள் குடை பிடித்து படியும், மழையில் நனைந்தபடியும் பள்ளிகளுக்கு சென்றனர். இது பெற்றோர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement