அரனையூர் கால்வாயில் குழாய்கள் அகற்றம்

இளையான்குடி ; இளையான்குடி அருகே உள்ள அரனையூர், கருஞ்சுத்தி கண்மாய்களுக்கு செல்லும் வைகை வரத்து கால்வாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்களை பதித்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

7 குழாய்கள் அகற்றப்பட்ட நிலையில் 3 குழாய்கள் மீதம் இருந்தது. நேற்று அதனை இளையான்குடி தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன.

Advertisement