ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா

கடமலைக்குண்டு : தமிழக அரசின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் 45 தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம் கலெக்டர் ஷஜீவனா வழங்கி பேசுகையில், மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்களில் 54,882 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். அதில் 26 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் குறைபாடுகளை சரி செய்து ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. இதில் பேரிச்சம்பழம், நெய், புரோட்டின் பவுடர், இரும்புச்சத்து டானிக் ஆகியவற்றை தாய்மார்கள், கர்ப்பிணிகள் பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,மகாராஜன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சித்ரா, பி.டி.ஓ.,மாணிக்கம், மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement