டி.என்.சிட்ஸ் நிறுவனத்திடம் ஏமாந்தோர் புகார் அளிக்கலாம்

சென்னை, நவ. 17டி.என்.சிட்ஸ் நிறுவனத்திடம் ஏமாற்றமடைந்தோர், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

இது குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., கனகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:

சென்னை, வேளச்சேரியில் டி.என்.சிட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் கிளைகள், மேற்கு தாம்பரம், பெருங்களத்துார் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

இந்நிறுவனம், பொதுமக்களிடம் முதலீட்டு தொகை வசூல் செய்து, திரும்ப தராமல் ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே உள்ளனர்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் யாராவது இருந்தால், அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையகம், அசோக் நகர் என்ற முகவரியில், தாங்கள் முதலீடு செய்ததற்கான ஆவணங்களுடன் நேரடியாக புகார் மனு அளிக்கலாம்.

இந்த மனுக்களை, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம், வரும் 30ம் தேதிகள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement