அத்திக்கடவு திட்டத்தில் 1,400 குளம் குட்டையை இணைக்க வேண்டும்!

அவிநாசி: அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழு கூட்டமைப்பு சார்பில், அவிநாசியிலுள்ள கொங்கு கலையரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், திட்டத்தில் விடுபட்டுள்ள, 1,400 குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்புவதற்கான திட்டத்தை தீட்டி திட்ட வரையறை தயார் செய்து அரசாணையாக வெளியிட்டு முதல் கட்ட நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை கேரளா அரசிடம் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். இது விஷயத்தில், உரிய நடவடிக்கை இல்லாவிடில், 2025 ஜன., முதல் வாரத்தில், அனைத்து விவசாய சங்கங்கள், பொது நல அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்த முடிவு செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement