சிறு நடமாடும் உணவு வணிகர்களுக்கு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில், சாலையோர சிற்றுண்டி, பானிபூரி, சில்லி சிக்கன் உள்ளிட்ட சிறு நடமாடும் உணவு வணி-கர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்-படை பயிற்சி நேற்று நடந்தது.
மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார். இதில், கம்பைநல்லுார், அனைத்து வணிகர் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலு-வலர்கள் நந்தகோபால், அருண், திருப்பதி பாப்பிரெட்டிப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால், அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் தனியார் நிறுவனத்தை சேர்ந்த சலீம், தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், கவச உடை, மேலங்கி, தலையுரை, பொருள் மேலாண்மை, இருப்பு வைத்தல், நான்கு விதமான பொருட்கள் கெடுவதற்கான சூழ்நி-லைகள் தவிர்த்தல், குடிநீர் தன்மை, உணவு பொருள் பாக்கெட்டு-களில் காண வேண்டிய விபரங்கள், குளிர்பதன பெட்டிகளில் பால் பொருட்கள் மற்றும் இறைச்சி வைத்திருக்க வேண்டிய குளிர்நிலை குறித்து விளக்கினார்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, 94440 42322 என்ற எண்ணிற்கும் அல்லது உணவு பாதுகாப்பு புகார், ஆப் செயலி மூலம் தெரிவிக்கலாம் என, மாவட்ட நிய-மன அலுவலர் பானுசுஜாதா கூறினார்.