விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுது: மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இன்றி குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே தொடர்ந்து நிலவுகிறது. இதனால் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இதில் பலரும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் குணமடையாத பட்சத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளை அணுகி மேல்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், வயதானோரை அதிகமாக பாதிக்கிறது. இதில் குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மொத்த குடும்பத்தினரையும் பாதிக்கின்றது. ஒருவருக்கு குணமாக சராசரியாக நான்கு முதல் ஐந்து நாட்களாகிறது. காய்ச்சல் விட்டாலும் கை, கால் மூட்டு வலி, தொண்டை வலியில் இருந்து பூரண குணமடைய ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை ஆகிறது.

இதனால் தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையுடன் அக்கம் பக்கத்தினர் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தண்ணீரை கொதிக்க வைத்து நன்றாக வெது வெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு குளிர்ச்சியான உணவுகளை பெற்றோர் வாங்கி கொடுக்கக்கூடாது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டில் நேற்று வரை 7 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு நாளைக்கு 40 பேருக்கு மேல் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மழைக்காலம் துவங்கும் முன்பே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் விருதுநகர், அதனை சுற்றியப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது:

மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு பகுதியாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement