11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை,பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே, ரயில் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், 11 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 கேரளா மாநிலம் ஆலப்புழா - ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் விரைவு ரயில், வரும் 21, 28ம் தேதிகளில், சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாக, பெரம்பூரில் இருந்து புறப்படும்

 கொச்சுவேலி - சத்தீஸ்கர் கோர்பா விரைவு ரயில், வரும் 21, 28ம் தேதிகளில் சென்ட்ரலுக்கு வராமல், பெரம்பூரில் இருந்து செல்லும்

 சென்ட்ரல் - கேரளா மாநிலம், கொல்லம் இரவு 11:20 மணி சிறப்பு ரயில், வரும் 26ம் தேதி சென்னை கடற்கரையில் புறப்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர் வழியாக இயக்கப்படும்

 சென்ட்ரல் - ஆந்திரா மாநிலம், விஜயவாடா அதிகாலை 5:30 மணி வந்தே பாரத் ரயில், வரும் 26ம் தேதி, சென்னை கடற்கரையில் புறப்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர் வழியாக இயக்கப்படும்

 கேரளா மாநிலம், பாலக்காடு - சென்ட்ரல் மாலை 4:10 மணி விரைவு ரயில், வரும் 26ம் தேதி கடற்கரைக்கு இயக்கப்படும்

 ஈரோடு - சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில், வரும் 26ம் தேதி பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்

 கர்நாடகா மாநிலம், கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்ட்ரல் இரவு 10:40 மணி விரைவு ரயில், வரும் 26ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்

 கேரளா மாநிலம், ஆலப்புழா - சென்ட்ரல் மாலை 3:30 மணி ரயில், வரும் 26ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயங்கும்

 சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம், மைசூர் சதாப்தி காலை 6:00 மணி விரைவு ரயில், 27ம் தேதி, 45 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

 சென்ட்ரல் - கோவை காலை 6:10 மணி விரைவு ரயில், 27ம் தேதியில் 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

 சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி காலை 6:25 மணி ரயில் வரும் 27ம் தேதியில், 30 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வழித்தடத்தில் மாற்றம்

சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள், இன்று முதல் 23ம் தேதி வரை, மதியம் 1:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை - செங்கல்பட்டு காலை 11:40, பகல் 12:20, 12:40, மதியம் 1:45, 2:15, இரவு 9:20 மணி ரயில்கள், மேற்கண்ட நாட்களில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே செல்லும் செங்கல்பட்டு - கடற்கரைக்கு மதியம் 1:45, 2:20, மாலை 3:05, 4:05, 4:35, இரவு 11:00 மணி ரயில்கள், மேற்கண்ட நாட்களில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Advertisement