பராமரிப்பின்றி கோவில் குளம்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து, தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு,வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, குளத்தில் நீராடி செல்வது வழக்கம்.

ஆனால், தற்போது,கோவில் குளம் பராமரிப்பு இல்லாததால், பக்தர்கள் நீராடுவது தடை செய்யப்பட்டுள்ளது. குளத்தின் படிகள் சரிந்தும், கரையின் மேல் அரச மரச்செடிகள் வளர்ந்தும் உள்ளன.

தண்ணீரில் பாசி படிந்து, பிளாஸ்டிக் குப்பையும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, சேதமடைந்த குளத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement