மாமியாரை ஏமாற்றி நிலம் பறிப்பு மோசடி செய்த மருமகன் கைது

ஆவடி, சோழவரம், செம்பிலிவரம் கிராமத்தை சேர்ந்தவர் ேஷாபாராணி,65. இவரது கணவர் இறந்த விட்டார். இவருக்கு நான்கு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகள் வனிதா, ஆந்திராவை சேர்ந்த சந்தகாரிமுன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவர் கொடுமை தாங்காமல், வனிதா, 2021ல் தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, எழும்பூர் நீதிமன்றத்திலும் ஷோபாராணி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வனிதாவின் குழந்தைகள், ேஷாபா ராணியிடம், ஒப்படைத்துவிட்டார்.

வனிதாவுக்கு சொந்தமான, 4.90 ஏக்கர் இடம், பொன்னேரி, செம்பிலிவரம் கிராமத்தில் இடம் உள்ளது. தற்கொலைக்கு முன், இந்த இடத்தை தன் தாய் ேஷாபாராணிக்கு வனிதா உயில் எழுதி வைத்தார். குடும்ப மருத்துவர் வாயிலாக அந்த உயில், தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், நிலத்தின் ஆவணங்கள், சாந்தகாரிமுன்னாவிடமே இருந்தது. சமீபத்தில் நில ஆவணங்களை பரிசோதித்தபோது, நிலத்தின் பட்டாவை வேறு ஒருவர் பெயருக்கு, ேஷாபாராணி மாற்றம் செய்து கொடுத்ததாக பதிவாகி இருந்தது.

மேலும், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 ஏக்கர் இடத்தை, காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் அடமானமாக வைத்துனா சந்தகாரிமுன்னா, 75 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். அதைக் கொண்டு ஹைதராபாத்தில் வீடு வாங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு, 15 கோடி ரூபாய்.

இதை அறிந்த ஷோபாராணி, நிலத்தை ஏமாற்றி விற்ற சந்தகாரிமுன்னா மீது, நடவடிக்கை கோரி ஆவடி கமிஷனரகத்தின், போலி ஆவண தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அண்ணாநகர், சாந்திகாலனியில் தலைமறைவாக இருந்த சந்தகாரிமுன்னா,38 வை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement