சேதமடைந்த மழைநீர் வடிக்கால்வாய்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கலியாம்பூண்டி ஊராட்சி, மீனாட்சி நகரில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில், 2017- - 18ம் நிதி ஆண்டில், 3 லட்சத்து 44,000 ரூபாய் செலவில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையை, திருப்புலிவனம் சாலையோடு இணைக்க, குறுக்கே அமைந்துள்ள மழைநீர் வடிக்கால்வாய் மீது மேல்தளம் அமைக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாய் மேல்தளம் இருபுறமும் சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள், நடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து,விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த வடிக்கால்வாய் மேல்தளத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement