மர்மமாக இறந்த வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

விருத்தாசலம்; கம்மாபுரம் அருகே மர்மமான முறையில் ஆற்றில் இறந்து கிடந்த வாலிபர் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மேலகரிவெட்டி பரமசிவம் மகன் அருள்பாண்டியன், 24. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி. கடந்த 14ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர், 18ம் தேதி கம்மாபுரம் அடுத்த சு.கீனனுார் வெள்ளாற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அருள்பாண்டியன் உடலில் காயங்கள் இருப்பதால், சாவில் சந்தேகம் இருப்பதாக, அவர தந்தை பரமசிவம் புகார் அளித்தார். கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை வாங்க மறுத்த உறவினர்களிடம் டி.எஸ்.பி.,க்கள் சேத்தியாதோப்பு விஜயகுமார், விருத்தாசலம் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், போலீசாரின் சமாதானத்தை ஏற்று, அருள்பாண்டியன் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் நேற்று மாலை அடக்கம் செய்தனர்.

Advertisement