கபடி: வீழ்ந்தது பெங்களூரு

புனே: புனேயில் நேற்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு, உ.பி., அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 19-18 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதியில் உ.பி., அணி துணிச்சலாக செயல்பட்டது. பெங்களூரு அணியை அடுத்தடுத்து ஆல் அவுட் செய்தது. முடிவில் உ.பி., அணி 44-30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
22 போட்டியில் 13 வெற்றி, 6 தோல்வியுடன் (3 சமன்) 80 புள்ளி எடுத்த உ.பி., 3வது இடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி (22ல் 2 வெற்றி, 18 தோல்வி, 1 சமன்), 19 புள்ளியுடன் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. தமிழ் தலைவாஸ் அணி, 8 வெற்றி, 13 தோல்வியுடன் (1 சமன்) 50 புள்ளி எடுத்து, 9வது இடம் பெற்று ஏற்கனவே கோப்பை வாய்ப்பை இழந்தது.

Advertisement