கஜகஸ்தானில் விமானம் வெடித்து சிதறியது; 42 பேர் பலி

1

அஸ்தானா: கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது. 42 பேர் உயிரிழந்தனர்.


அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 62 பேரை ஏற்றிக்கொண்டு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை.


பயணிகள்,, விமான சிப்பந்திகள் என மொத்தம் 67 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


விபத்துக்குள்ளாகும் முன்னர், அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement